Blogger Widgets

Saturday, June 9, 2012

என் காதலி









நித்தம் நித்தம் என்னுள்ளே
நிம்மதி தந்து போனவளே!
சித்தம் மொத்தம் என்னுள்ளே
சிலையாய் வந்து நின்றவளே!
கலைகள் மொத்தம் கற்றுண்டு
கண்ணடி வித்தை செய்தவளே!
எந்தன் கவிதை நீ கேட்டு
நில்லடி கொஞ்சம் என்னவளே!
பாலை மணல்கள் பறந்தோட
காற்றும் கொஞ்சம் அனலாட
நினைவில் நீயே விளையாட
எந்தன் நாவும் உன் கவிபாட
கேளடி கொஞ்சம் என்னவளே!
என் நெஞ்சமதில் நீ வந்து
தஞ்சமதை நான் தந்து
பஞ்சமில்லா பாரினிலே
கஞ்ச முத்தம் தந்தவளே!
மிச்சம் எப்போ என்னவளே!
உன் பாதம் பட்ட வாசல்படி
பூக்கள் கொஞ்சம் கேட்டதடி
பூக்கள் அதை நான் தூவ
புன்னகையில் பூகூட
பூப்பெய்தி விட்டதடி!

நினைவெல்லாம்




வெட்டிப்பயன் போல்
ஊரை சுற்றி வந்தேன்
வெட்டும் கத்தி பார்வையை கொண்டு
உன்னை சுற்ற வைத்தாயடி பாவி...
உறவுகள் வேண்டாம் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில்
என் உறவே நீதான் என நினைக்க தோன்றுதடி.........
இதை உன்னிடம் சொல்லிவிடலாம் என்றாலோ
தயக்கம் தடுக்கிறது
எங்கே நீ
என்னை கருதிவிடுவயோ
எருக்கம் பூவாய் என்று..............
என் பாதைகள் கூட
நீ இல்லாமல் பாலைவனம் போல் உள்ளதடி...
முடிவில்
உன் தொல்லைகள் தாங்காமல்
உன்னை நினைத்து விஷம் அருந்தலாம் என்றாலோ 
உன் வார்த்தைகளை போல் தித்திக்கிறதே........
தூக்கு போடலாம் என்றாலோ
உன் கூந்தல் என் ஞாபகத்திற்கு வந்து தடுக்குதடி......
நீரில் மூழ்கி இறந்து விடலாம் என்றாலோ
உன் கொலுசு ஒலி சத்தம் கேட்கிறதே.......
இறுதில் இறக்கவும் முடியவில்லை 
உன்னை இறுக்கமாக அணைக்கவும் முடியவில்லை.......
எதிலும் நீயே தெரிகிறாய்
என்
நினைவெல்லாம் நீயே வாழ்கிறாய்....

உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்




யாரும் இல்லாத என் இராத்திரிகள்
மறு நிமிடம் களைந்து போகும் என் கனவுகளில்
உன்னுடன் நான்.
உனக்காக காத்திருப்பதை விட என்
மரணத்திக்காக காத்திருக்கலாம்
என் மரணம் எனக்கு சுமையானதல்ல
நீ இல்லாத போது.
உனது பரிசம், காதல், முத்தம், அரவணைப்பு
அனைத்திற்காகவும் ஏங்கும் அனாதை குழந்தை தான் என் உள்ளம்.
என் இதயம் மட்டும் தினம் தினம் இரத்தக் கண்ணீர்
சிந்துகிறது... "நீ இல்லை"
கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம்
அதுவும் நிரந்தரம் இல்லை.
நான் உன்னை பிரியவில்லை
நீ என் அருகும் இல்லை. - ஆனால்
உன்னை யாசிக்கிறேன் - அதை விட
உன்னை நேசிக்கிறேன் - ஆனால்
என் முச்சு காத்தோடு மட்டும் தான் உன் உரசல்கள்..
நீ காத்தோடு தானே கலந்து விட்டாய்
என் உயிரில் கலந்தது போல...
என் உயிர் நீ இல்லை,
அர்த்தம் இல்லாதது தான் என் பயணம்
ஆனாலும் தொடர்கிறேன் உனக்காக,
உன் மறு ஜென்மத்துக்காக...
நம் குழந்தையாகவாவது நீ பிறப்பாய்
என்ற நம்பிக்கையில் உன்னை சுமக்கிறேன்
இனி உனக்கு மரணமே இல்லாத என் கருவறையில்..

ஒருதலைக் காதல்




காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை
ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்
பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்
நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை...!

காதல் ஏக்கம்



உன் வியர்வை நாற்றம் கூட
எனக்கு சுகம் தானடி........!!
உன்னை கட்டி பிடிக்கையில்.......!!

கண்டதும் காதல்





முதல் பார்வையிலேயே,
என் பருவம் பதறியதே,
கன்னி நான் கர்ப்பம் அடைந்தேன்,
நம் காதலை பிரசவித்தேன்!

கனவில் என் வாழ்க்கை







பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை,
நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....!

Friday, June 8, 2012

காதல் விளையாட்டு





இருவருக்குமே வெற்றி என்பதெனில்
எனக்கும் சந்தோஷம்தான்.
நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்றுபோககூட
சித்தமாயிருக்கிறேன்.
ஆனால்,
இருவருமே தோற்றுபோவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல் விளையாட்டு.

காதல் அல்ல





எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் வாரம்

காதல்





உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!

Monday, June 4, 2012

என் தியாகம்





வானளவு சிந்தித்து ஊமையாகி போன உணர்வுகள்...
வேற்றினக் காரன் என்று தகுதியிழந்ததால்
காதலை வெறுத்த என்னவள் ஒருபுறம்,
இனத்தில் சேர் என்று அன்பாய் அரவணைக்கும்
என்னை ஈன்றவள் ஒருபுறம் என்று,
காரணங்காட்டி பிரிந்துபோன என் காதலில்
"தியாகம்" என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறது என் இயலாமை

என்றும் மாறாதது





அன்பே உறவுகள் மாறி போகலாம்
உரிமைகள் விட்டு பறிபோகலாம்
கவலைகள் கூடி போகலாம்
உள்ளமும் வாடி போகலாம்

என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே

சுழல்காற்றும் திசைமாறி போகலாம்
அலைகடலும் கறைமீறி போகலாம்
சந்திரனும் சுடர்விட்டு எரியலாம்
சூரியனும் சூடு தணிந்து போகலாம்

என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே

நறுமணமும் நாறி போகலாம்
இணைந்த மணமும் இருதுருவமாகலாம்
உயர்ந்த நட்பும் உடைந்து போகலாம்
உயிர்கொடுத்தவளும் உதவாமல் போகலாம்

என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே

மாற்றமும் மாறி போகலாம்
காதலும் கசந்து போகலாம்
கானல் நீரும் தாகம் தணிக்கலாம்
பகற்கனவும் பலித்து போகலாம்

என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே

தருமமும் தவறி போகலாம்
சத்தியமும் சாய்ந்து போகலாம்
சாய்ந்த மரமும் துளிர் விடலாம்
கூறிய வாளும் குத்தாமல் போகலாம்

என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே

என் உணர்வுகளும் உறைந்து போகலாம்
உடலும் மெலிந்து போகலாம்
நாடி நரம்பும் தளர்ந்து போகலாம்
உயிரும் உடலை விட்டு பிரிந்து போகலாம்

என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே


என் வீட்டு கண்ணாடி





என் வீட்டு கண்ணாடியில்,
என் உருவம் தேட..
உன் முகம் காண்கிறேன்,
இது மந்திர கண்ணாடியா?
இல்லை,
ஒரு முறை உன்னை கண்டதனாலோ,
இவனும் என் போல,
உலகம் மறந்து விட்டான்,
கடமை தவறி விட்டான்..
நாளை,
ஜோடியாக நம்மை சுமக்கும் நாளில்,
கணம் தாங்காமல் உடைந்து போவானோ?